Sunday, 27 January 2013

VIJAYALAYA CHOLESWARAM-விஜயாலய சோழீஸ்வரம்

விஜயாலய சோழீஸ்வரம்

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன.
பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
vijayalaya choleswaram

vijayalaya choleswaram

vijayalaya choleswaram

கடம்பர் கோயில்

நார்த்தாமலை பேருந்து நிலையத்திலிருந்து கி.மீ தொலைவில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்கருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன்மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது.
குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டு பெரியதொரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. முதலாம் ராஜராஜன் காலம் முதல் சோழ அரசர்களில் கடைசி மன்னனான மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இந்த வளாகத்தில் உள்ளன.

aaluruttimalai

aaluruttimalai

vijayalaya choleswaram

2 comments: